ஜந்து மாக கற்ப்பிணி பெண்ணை கற்பழித்த காமக்கொடூரர்கள்
[ வியாழக்கிழமை, 02 மே 2013,
ஆந்திரமாநிலம் மகபூப்
நகர் மாவட்டம் அச்சம் பேட்டையைச் சேர்ந்தவர் நல்லம்மா. இவர் ஐதராபாத் மதுரா நகரில்
சாலையோர குடிசையில் கணவருடன் வசித்து வந்தார்.
அங்குள்ள வீடுகளில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். நல்லம்மா 5 மாத
கர்ப்பிணியாக உள்ளார். நேற்று நல்லம்மா வீட்டில் தனியாக இருந்த போது மோட்டார்
சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். வீட்டு வேலைக்கு 2 பெண்கள் தேவை என்று
அழைத்தார்.
இதையடுத்து நல்லம்மாவும், பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமியும் அந்த
வாலிபருடன் செல்ல தயாரானார்கள். அந்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளிலேயே 2
பெண்களும் ஏறினர். மோட்டார் சைக்கிளில் வாலிபரின் பின்னால் நல்லம்மாவும், அவருக்கு
பின்னால் லட்சுமியும் அமர்ந்து பயணம் செய்தனர். பாலாஜிநகர் அருகே சென்ற போது
மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர் பின்னால் இருந்த லட்சுமியை இறங்க சொன்னார்.
லட்சுமி இறங்கியதும் நல்லம்மாவுடன் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் பறந்தார்.
அங்குள்ள மைதானத்துக்கு நல்லம்மாளை அழைத்துச் சென்று அவளை கற்பழித்தார். மேலும்
செல்போனில் தொடர்பு கொண்டு தனது நண்பர்கள் 2 பேரை வர வழைத்தார். அவர்களும்
நல்லம்மாளை கற்பழித்தனர். பின்னர் அவளை அங்கேயே விட்டு விட்டு 3 பேரும் தப்பி
விட்டனர். மறுநாள் காலை நல்லம்மா தட்டுத்தடுமாறி வீடு வந்து சேர்ந்தாள்.
நடந்த விவரத்தை கணவரிடம் கூறினார். இது குறித்து குஷாயிகுடா பொலிசில் புகார்
செய்யப்பட்டது. பொலிசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து
விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment