அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 29 May 2013

அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை திருடிய சீனா

[ வியாழக்கிழமை, 30 மே 2013,
அமெரிக்காவின் இராணுவ இரகசியங்கள் அடங்கிய வலைதளத்தில், 20க்கும் மேற்பட்ட போர் விமானங்களின் மாதிரி நகல்களை சீன பொறியியலாளர்கள் திருடியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் இராணுவ இரகசியங்கள் அடங்கிய முக்கிய வலைதளத்தில், அந்நாட்டு போர் விமானங்களின் மாதிரி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதளம் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் மட்டுமே காணும் வகையில் பலத்த பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வலைதளத்தை சீன மென்பொறியாளர்கள் ஹேக் செய்துள்ளனர். மேலும் அதிலிருந்து 20க்கும் மேற்பட்ட முக்கிய போர் விமானங்களின் மாதிரி நகல்களை திருடிய விவரமும் வெளியாகியுள்ளது.
இத்தகவலை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் அமெரிக்கா போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டு விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன யுக்திகளை தெரிந்து கொள்வதோடு, அவற்றை செயலிழக்கச் செய்யும் ஆய்விலும் சீனா ஈடுபடக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதே போல் அவுஸ்திரேலியாவின் உளவுப்படை அலுவலம் மற்றும் அதிகாரிகள் குடியிருப்பின் மாதிரியையும் சீனா திருடியுள்ளது.
இதன் மூலம் அந்நாட்டு உளவுத்துறையில் எவ்வகை கட்டமைப்புகள் உள்ளன என்றும், அதன் செயல்பாடுகள் குறித்தும் சீனா நோட்டமிட்டுள்ளது.
மேலும் உளவுத் துறையின் வலைதளமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பாப் கோர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

newsonews thanks

No comments:

Post a Comment