Friday, June 28th, 2013

மலேசிய சுற்றுப்புற அமைச்சர் ஜி. பழனிவேல் (வலது) இந்தோனீசிய சுற்றுப்புற அமைச்சர் பல்தஸர் கம்புவாயாவை நேற்று ஜகார்த்தாவில் சந்தித்தார். படம்: ஏஎப்பி
மலேசிய சுற்றுப்புற அமைச்சர் ஜி. பழனிவேலைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பல்தஸர் இவ்வாறு தெரிவித்தார். இரண்டு நாள் அதிகாரிகள் கூட்டத்திற்குப் பிறகு மலேசி யாவின் கோலாலம்பூரில் ஜுலை 17ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறும். ஆசியான் கூட்டத்தில் சிங்கப்பூர், புருணை, தாய்லாந்து ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளும்.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைப்பதற்காக கூறும் வழி முறைகளைக் கேட்க இந்தோ னீசியா தயாராக உள்ளது என்றார் டாக்டர் பல்தஸர். “இந்தோனீசியா ஒப்புதல் தெரிவித்தால், தீயணைப்பு வீரர்களை ரியாவ் மாநிலத்திற்கு அனுப்பத் தயாராக உள்ளோம்,” என்றார் திரு பழனிவேல்.
tamilmurasu thanks
No comments:
Post a Comment