அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 28 June 2013

பாரதீய ஜனதாவுடன் தே.மு.தி.க. கூட்டணி: விஜயகாந்த் முடிவு?

பாரதீய ஜனதாவுடன் தே.மு.தி.க. கூட்டணி: விஜயகாந்த் முடிவு?
சென்னை, ஜுன். 29- 

தே.மு.தி.க. கடந்த தேர்தலில் 29 எம்.எல்.ஏ. தொகுதிகளை கைப்பற்றி தமிழக எதிர்கக்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்த நிலையில் 7 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக மாறினார்கள். இருப்பினும் 22 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் தே.மு. தி.க. நடந்த முடிந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. 

இடது சாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று திட்டமிட்டனர். ஆனால் இடது சாரிகள் அ.தி.மு.க.வுடன் கைகோர்த்தது. இதனால் காங்கிரஸ் ஆதரவை விஜயகாந்த் நாடினார். தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார். காங்கிரசும் தே.மு.தி.க.வுக்கு ஆதரவளிக்க முன் வந்தது. 

இதனால் மேல்-சபை தேர்தலில் களம் இறங்க முடிவெடுத்தார். ஆனால் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெறுவாரா? என்ற நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்பட்டதும் தி.மு.க. மேலிடம் காங்கிரஸ் தயவை நாடியது. தி.மு.க.வை ஆதரிப்பதா? தே.மு.தி.க.வை ஆதரிப்பதா? என்று தர்ம சங்கடத்தில் தவித்த காங்கிரஸ் மேலிடம் கடைசி நேரத்தில் தி.மு.க.வுக்கு கை கொடுத்தது. 

தே.மு.தி.க.வை கைவிட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் கனிமொழி வெற்றி பெற்றார். அரசியல் சதுரங்கத்தில் வீழ்ந்ததால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

இதற்காக பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களது கருத்துக்களை கேட்ட விஜயகாந்த் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 பாராளுமன்ற தொகுதியிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. 

அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்தது. இருப்பினும் 9 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் மேல் ஓட்டுகள் வாங்கியது. சில தொகுதிகளில் முன்னணி கட்சி வேட்பாளர்களின் தோல்விக்கு தே.மு.தி.க. ஓட்டுக்களை பிரித்ததே காரணமாக அமைந்தது. அந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 31.26 லட்சம் வாக்குகளை பெற்றது.

இது பதிவான வாக்குகளில் 10.08 சதவீதம் ஆகும். வருகிற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து நிலவுவதால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரசுக்கு பாடம் புகட்டுவோம் என்ற கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

maalaimalar thanks

No comments:

Post a Comment