சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென புகுந்த பாம்பால் அங்கு காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் தற்போது பல இடங்களில் மலிவு விலை உணவகம் "அம்மா உணவகம்" என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் காலையில் இட்லி, பொங்கலும், மதியத்தில் தயிர், தக்காளி சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
குறைந்து விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருவதால் ஏழை, கூலித் தொழிலாளர்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். குறைந்த விலையில் அவர்கள் வயிறார சாப்பிட்டும் செல்கின்றனர்.
இந்த நிலையில், திருவொற்றியூரில் உள்ள அம்மா உணவகத்தி்ல் இன்று ஏராளமானவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பாம்பு ஒன்று உணவகத்தில் புகுந்தது. பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் சாப்பாட்டை கீழே போட்டு விட்டு ஓடினர்.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அம்மா உணவகத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடித்து வன காப்பாளரிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment