அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 25 June 2013

தொடர்ந்தும் மலேசியாவை சூழ்ந்துள்ள மாசு மண்டலம்

 தொடர்ந்தும் மலேசியாவை சூழ்ந்துள்ள மாசு மண்டலம்June 25, 2013  08:48 am
இந்தோனேசியாவின் காட்டுத் தீயினால் பரவிவரும் புகை-மாசு மண்டலம் மலேசியாவின் பல பகுதிகளை இன்னும் சூழ்ந்துகொண்டுள்ளது.


திங்கட்கிழமை தலைநகர் கோலாலம்பூரில் எதிரில் இருப்பவை சரியாக தெரியாதபடி மாசுமண்டலம் மூடியிருந்தது.

கோலாலம்பூரிலும் செலாங்கோர் மாநிலத்திலும் பள்ளிக்கூடங்களை மூடிவிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரண்டு தென் மாவட்டங்களில் மாசு மண்டலத்தின் அளவு அதிகரித்திருந்ததால் மலேசியா அவசரநிலை பிரகடனம் செய்திருந்தது.

சிங்கப்பூரில் காற்றின் போக்கு மாறியுள்ளதால் வானம் தெளிவாக மாறிவருகிறது.

இதற்கிடையேசெயற்கையாக மழையை பெய்ய வைக்கக்கூடிய ´கிளவுட் ஸீடிங்´தொழிநுட்ப முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக இந்தோனேசியா கூறியுள்ளது.

இதன்மூலம் சிறிதளவு மழைத்தூறல்களைத் தான் வரவழைக்க முடிந்துள்ளது.

தமக்கும் செய்வதற்கு வேறுவழிகள் இல்லையென்று அந்நாட்டின் இடர் மேலாண்மை அமைச்சர் தெரிவித்தார்

news thamilan thanks

No comments:

Post a Comment