சென்னை, ஜூலை 8-
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது.
இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் 10 முதல் 20 சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. ஆந்திராவில் பல பகுதிகளில் 10 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. கேரளாவிலும் பெரும்பாலான இடங்களில் 5 முதல் 10 சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணி வரையிலான மழை அளவு குறித்த விவரம் வருமாறு:-
திண்டிவனம், கடலூர் பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழையும், தாம்பரத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், திருத்துறைப்பூண்டி, திருவாலங்காடு, நெய்வேலி, திருவள்ளூரில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், மன்னார்குடி, சோழிங்கர், புதுச்சேரி, சிதம்பரம், மயிலம், பெருங்களூர், ஆர்.கே.பேட்டை, வட சென்னை, திருத்தணி ஆகிய பகுதிகளில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், எண்ணூர், அரக்கோணம், செம்பரம்பாக்கம், மரக்காணம், பூந்தமல்லி, ஆடுதுறை, வேலூர், செய்யாறு, காவேரிப்பாக்கம், கலவை, வாலாஜா ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இன்றைய(திங்கட்கிழமை) மழை நிலவரம் குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அதன்படி, சென்னையின் சில இடங்கள் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

maalaimalar thanks
No comments:
Post a Comment