எத்தனையோ விதமான விசித்திர நோய்களுக்கு உள்ளான விந்தை மனிதர்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வரிசையில் சீனாவைச்சேர்ந்த “சிப்பி மனிதன்” என்று அழைக்கப்படுபவரும் ஒருவர். மர மனிதன் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா அவரைப்போலவே விநோத தோல் நோயால் பீடிக்கப்பட்டவர் இந்த சிப்பி மனிதர். இவரது உடல் எங்கும் சிப்பி போன்று குட்டைகள் காணப்படுவதனாiலெயே இவர் “சிப்பி மனிதன்” என அழைக்கப்படுகிறார். இவர் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
சீனாவின் தெற்கு பகுதியைச்சேர்ந்தவர் வுயைணொரயn என்பவர். இவருக்கு தற்போது வயது42 ஆகிறது. எனினும் இவர் இவ்வகையான நோயால் கடந்த 2009 களில் பீடிக்கப்பட்டிருந்தார். ஆரம்பித்தில் தனது கைகள் கால்களில் சிறு சிறு கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் வளர்வதை அவதானித்து அவர் இதற்காக பல தடவை கிறீம் உபயோகித்திருக்கிறார்.
பின்னர் காலப்போக்கில் இது மேலும் அதிகரிக்க தொடங்கியது. கை கால்கள் தொடங்கி முதுகு வரை பரவ தொடங்கியது. பின்னர் இதனை இலகுவில் சரி செய்ய முடியாதென புரிந்து கொண்ட இவர் செய்வதறியாது தனிமைப்படுத்தப்பட்டார். தனது கை கால்களை வளைக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டார். நண்பர்கள் உறவினர்கள் அருகில் செல்வதை நிறுத்திக்கொண்டார். இக்காலகட்டத்தில் இவருக்கு வந்த பெயர்தான் “சிப்பி மனிதன்”
இதற்கு முன்னரும் இவ்வகையான அரிய தோல் வியாதியால் பலர் பாதிக்கப்பட்டிருந்தமையை எமது தளத்திலையே நீங்கள் கண்டு வியந்திருப்பீர்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக “மீன் செதுல்களுடன் குழந்தை” – “மர மனிதன்” – “நீர் குமிழி மனிதன்” போன்ற செய்திகளை கூறலாம்.
மேலும் குறித்த சிப்பி மனிதனுக்கு இருந்த சோகம் 2010 ம் ஆண்டளவில் விலகத்தொடங்கியது. இவரின் நிலமை அறிந்த தோல் நோய் விசேட வைத்தியர் ஒருவர் பரிசோதனைகளை மேற்கொண்டு இவருக்கு சந்திர சிகிச்சை செய்வதென முடிவு செய்தார். இதன் பிரகாரம் சந்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நீங்கள் பார்த்த “சிப்பி மனிதன்” சாதாரண மனிதனாக நடமாடுகிறார்.
puthiyaulakam thanks
No comments:
Post a Comment