ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் பயனா நகரை சேர்ந்தவர் பாபுலால் தாக்கர்(64). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் பல ஆண்டுகளாக சொந்த மகள்கள் இருவரை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார்.
இந்த மிருகத்தனமான செயலுக்கு இவரது மனைவியும் ஆதரவாக இருந்துள்ளார். வீட்டிற்குள் நடப்பதை வெளியே சொன்னால் குடும்ப கவுரவம் குலைந்துப்போய்விடும் என்று பெற்ற தாயே மகள்களை மிரட்டி அடக்கி வைத்துள்ளார்.
இவர்களுக்கு பயந்து மகள்களும் இவரது செயல்களுக்கு அடங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு பிறந்த பேத்தி முறை கொண்ட சிறுமியையும் அந்த காமுகன் கற்பழித்துள்ளான். இதனை அறிந்த மகள்கள் ஆத்திரம் கொண்டு பயானா நகர் பொலிஸ் நிலையத்தில் தங்கள் தந்தை மீது புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாபுலால் தாக்கர் மற்றும் அவரது மனைவி சகுந்தலா ஆகியோரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் இருவரையும் யூலை 31ம் திகதி வரை விசாரணைக் காவலில் அடைத்து வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
newindianews thanks |
No comments:
Post a Comment