அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 September 2014

3000 சிறுவர்களின் உயிரை பறித்த எபோலா வைரஸ்



3000 சிறுவர்களின் உயிரை பறித்த எபோலா வைரஸ்
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 

மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ்  தொற்று காரணமாக மூவாயிரம் சிறுவர்கள் உயிரிழந்தள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.


கடந்த பெப்ரவரி மாதம் கினியாவில் பரவத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, செனெகல் ஆகிய நாடுகளிலும் பரவியதில், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. குழந்தைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நோயினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் நாடுகளில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக எடுக்கப்பட்ட கணிப்பீடுகளின் முடிவுகளே இவை என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகளிலும் லைபீரியாவே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோர்கள் இறந்ததினால் புறக்கணிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பராமரிப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவிக்கின்றது.

இக்குழந்தைகளின் உறவினர்கள் தங்களின் பெற்றோர்கள் இறந்து போன மருத்துவமனைகளிலேயே ஆதரவற்றவர்களாக உள்ளனர்.

மூன்று, நான்கு வயதுடைய குழந்தைகள் கூட இவ்வாறு காணப்படுவதாக யுனிசெப் கூறுகின்றது.

சியரா லியோனில் அடுத்த மாதம் இதற்கான ஒரு கூட்டத்தைக் கூட்ட ஐ.நா. அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னர் இத்தகைய குழந்தைகளுக்குத் தகுதியான பாதுகாப்பாளர்கள் கிடைக்கவேண்டும் என்று யுனிசெப் எதிர்பார்க்கின்றது.


newsonews thanks

No comments:

Post a Comment