அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 September 2014

தலித் என்பதால் இன்றும் என்னை தீண்டத்தகாதவராக நடத்துகின்றனர்!-பீகார் முதல்வர் வேதனை!


பாட்னா: சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சில சக்தி வாய்ந்த மக்கள், தொடர்ந்து தன்னை தீண்டத்தகாதவராகவே நடத்துவதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி. தீண்டாமையை ஒழித்து, ஜாதி, மத, நிற பேதமைகளை நீக்க தொடர்ந்து உலக நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆன்போதும், ஆங்காங்கே இலைமறை காயாக சில தீண்டாமை, சாதி, மதக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.


சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சில சக்தி வாய்ந்த மக்கள், தொடர்ந்து தன்னை தீண்டத்தகாதவராகவே நடத்துவதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி. தீண்டாமையை ஒழித்து, ஜாதி, மத, நிற பேதமைகளை நீக்க தொடர்ந்து உலக நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆன்போதும், ஆங்காங்கே இலைமறை காயாக சில தீண்டாமை, சாதி, மதக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. தலித் என்பதால் இன்றும் என்னை தீண்டத்தகாகவராகவே நடத்துகின்றனர்: பீகார் முதல்வர் வேதனை கல்வியரிவு இல்லாத ஒடுக்கப்பட்ட ஏழைகள் தான் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்ற பிம்பத்தை உடைப்பதாக அமைந்துள்ளது பீகார் மாநில முதல்வரின் சமீபத்திய பேச்சு. சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, முதல்வராக பதவியேற்ற பிறகும் தொடர்ந்து தன்னை தீண்டத்தகாதவராகவே சில சக்தி வாய்ந்த மக்கள் நடத்துவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-  நான் மாநில முதல்வராக இருந்தாலும் கூட இப்போதும் கூட சில சக்தி வாய்ந்த மக்கள் என்னை தீண்டத்தாகாதவாராகத்தான் நடத்துகின்றனர். ஏனெனில் நான் மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தான் இவ்வாறு செய்கின்றனர்.  மாதுபானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்ய வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று நான் கோவிலுக்கு சென்றேன். ஆனால் கோவில் சென்று திரும்பிய பிறகு கோவிலையும் அங்குள்ள சிலையும் கழுவப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. சில வேலைகளை முடித்து கொள்வதாகவும் அல்லது சில சலுகைக்களுக்காவும் எனது காலை மக்கள் தொடுகின்றனர். ஆனால் சமுக அளவில் வருகையில் அவர்கள் என்னை இன்னும் தீண்ட தகாதவராகத்தான் நடத்துகின்றனர். இது மகாதலித் வகுப்பை சேர்ந்தவர்களை அவமானப்படுத்துவது செயல் ஆகும்’ என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

thoothuonline thanks

No comments:

Post a Comment