அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 September 2014

பெட்ரோல் விலை 65 காசு குறைப்பு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

 அக்டோபர் 01, 2014,

பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசு குறைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 75 காசு வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு கண்டுள்ளதால் லிட்டருக்கு 65 காசு வரை மட்டுமே விலை குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, வரிகள் போக, சென்னையில் பெட்ரோல் விலை 71 ரூபாய் 55 காசில் இருந்து 68 காசு குறைந்து ஒரு லிட்டர் 70 ரூபாய் 87 காசாக இருக்கும்.

கடந்த மாதம் வரை டீசல் விலை மாதந்தோறும் 50 காசு அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை டீசல் விலையில் மாற்றம் அறிவிக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை சரிவால் டீசல் விற்பனையிலும் இழப்பு முற்றிலும் நீங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தாயகம் திரும்பியதும் டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment