ஊரில் வாகன பயணத்தின் இடையில் 11,12 வகுப்புகள் பற்றிய பேச்சு அப்பொழுது 11,12 ஊரில் படிக்கும் மாணவர்கள் அரசின் சலுகைகளை பெறமுடியாது என்று பேசியவர் கவலை தெரிவித்தார். நானும் கல்லூரி உயர்கல்விக்கான மாணவிகளுக்கு மாதம் ₹1000. மற்றும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 போன்றவை கிடைக்காது அதை பற்றி சொல்கிறார் என நினைத்தேன்.
என்ன மாதிரியான சலுகைகள் இழக்க நேரிடும் என்பதை அறிய வேண்டும் என்ற ஆவலில் தேடுபோதுதான் பள்ளிகள் பற்றி பேசுகிறோம் ஆனால் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லையோ, இல்லை இதுபற்றிய விழிப்புணர்வு இல்லையோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.
11,12 இல்லை. ஊரில் 9,10 படிக்கும்போதே பல சலுகைகளை மாணவர்கள் இழக்கிறார்கள்.
மாணவர் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் முழுமையாக அரசுப் பள்ளியிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலோ தமிழ் வழியில் படித்தால் மட்டுமே சலுகைகள் கிடைக்கும்.
இந்த சூழ்நிலையில், ஊரில் 8 வரை மட்டுமே அரசு பள்ளி. 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளை மேனேஜ்மென்ட் பிரிவில் படித்துவிட்டு மீண்டும் 11,12 பக்கத்து ஊரில் அரசு பள்ளியில் படித்தாலும் , அரசுப் பள்ளி மாணவருக்கான தகுதியை இழக்க நேரிடும் காரணம் அந்தத் தொடர்ச்சி (Continuity)இல்லாததால்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக, அனைத்துப் படிப்புகளின் சேர்க்கையிலும் (Admissions) 7.5% தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
7.5% உள் இடஒதுக்கீடு மருத்துவத் துறைக்கு (MBBS/BDS) மட்டுமானது அல்ல.
இது தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து வகையான தொழில்முறைப் படிப்புகளுக்கும் (Professional Courses) பொருந்தும்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், மற்றும் சுயநிதித் தனியார்ப் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இவர்கள் படிக்க முடியும்.
இந்த 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்முறைப் படிப்புகளில் சேர்ந்தால், அவர்களுக்கான கல்விக் கட்டணம் (Tuition Fees), விடுதிக் கட்டணம் (Hostel Fees), மற்றும் போக்குவரத்துக் கட்டணம் போன்ற அனைத்துச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்கும். என்பதையும் பார்க்க முடிந்தது.
பள்ளி நிர்வாகம் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்த அரசு "அனுமதி" (Recognition) தருமே தவிர, "நிதி" (Grant) தராது.
9, 10-ஆம் வகுப்புகளை, எதிர்காலத்தில் அரசு ஊதியம் கொடுக்கும் "அரசு உதவி பெறும் வகுப்புகளாக" மாற்ற முடியுமா என்றால் முடியாது காரணம்.
"அரசு நிதியுதவி" (Grant-in-Aid) வழங்குவதில்லை என்ற "கொள்கை முடிவைக்" கடைப்பிடித்து வருகிறது.