அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 26 September 2026

அஸ்ஸலாமு அலைக்கும்...கீழக்கரை முஹம்மது சதக் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் (*CM Trophy* General public ) பிரிவில் நமதூர் அணியினர் 3ஆம் இடத்தை பிடித்துள்ளனர்

முஸ்லீம் முன்னேற்ற சங்கம் நடத்தும் 27-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டி துவக்க விழா அழைப்புநாள்:26/09/2026 நேரம்:மாலை 5:30 மணிஇப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து முதல் போட்டியினை துவங்கி வைப்பவர் மதிப்பிற்குரிய தேவிப்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள், சங்கதார்கள்,மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு செயலாளர் முஸ்லீம் முன்னேற்ற சங்கம் புதுவலசை.

Tuesday, 1 September 2026

சிலம்பம் வகுப்பு தொடக்க விழாவிற்கு

🌿 அன்புடன் அழைக்கிறோம் 🌿
அழைப்பிதழ்
புதுவலசை ஜமாஅத் உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள், மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஊர்மக்கள் அனைவரையும்
🥋 சிலம்பம் வகுப்பு தொடக்க விழாவிற்கு
அன்புடன் அழைக்கிறோம்.
தங்களின் சிறப்பான வருகையும், வாழ்த்துகளும் இந்நிகழ்வை மேலும் சிறப்பானதாகவும், நினைவுகூரத்தக்கதாகவும் மாற்றும்.
📅 தேதி: 01/09/2026
⏰ தொடக்க விழா: மாலை 5:15 – 5:30 மணி
🥋 சிலம்பம் வகுப்பு: மாலை 5:30 – 6:30 மணி
📍 இடம்: அரபி ஒலியுல்லா மேல்நிலைப் பள்ளி மைதானம், புதுவலசை
அனைவரும் அன்புடன் கலந்து கொண்டு, தங்களின் மதிப்புமிக்க வருகையால் இந்நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நம்ம ஊரில் "ஆசனி" ஊரணி

நம்ம ஊரில் "ஆசனி" ஊரணி இருப்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வித்தியாசமான ஒரு பெயர் எவ்வாறு அந்த வந்தது என்று பலருக்கும் தெரிய வாய்பில்லை. 

அந்த ஊரணிக்கு "ஆசனி" என்ற பெயர் வந்ததற்கு  வரலாற்று  தாவரவியல் பின்னணி இருக்கின்றது.

முற்காலத்தில் தமிழகத்தில் நீர்நிலைகளை (ஊரணிகளை) வெட்டும்போது, அதன் கரைகளில் குறிப்பிட்ட வகை மரங்களை நட்டு வைக்கும் வழக்கம் இருந்தது.

குறிப்பாக, காடுகளில் தானாக வளரும் காட்டுப் பலா மரத்தை 'ஆசினிப் பலா' / 'அயனிப் பலா' என்று அழைப்பார்கள்.
இந்த மரங்கள் பழங்காலத்தில் தமிழகத்தின் கடலோர மற்றும் வறண்ட பகுதிகளிலும் நீர்நிலைகளின் ஓரங்களில் நிழலுக்காகவும், நிலத்தடி நீரைச் சேமிக்கவும் வளர்க்கப்பட்டன.

 அந்த ஊரணி வெட்டப்பட்ட காலத்தில், அதன் கரையோரம் பிரம்மாண்டமான ஆசனி மரம் (காட்டுப் பலா மரம்) இருந்திருக்கலாம். அல்லது வைத்து இருக்க வேண்டும். அந்த மரத்தின் நிழலில் மக்கள் அமர்ந்து சென்றதால், காலப்போக்கில் அந்த நீர்நிலையை குறிப்பிட 'ஆசனி ஊரணி' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு  காலப்போக்கில் அதுவே நிலைத்துவிட்டது.

தமிழ்ப் பேரகராதி மற்றும் சங்க இலக்கியங்களின்படி, பலா மரத்திற்கு வழங்கப்படும் 24 தூய தமிழ்ப் பெயர்களில் 'ஆசனி' (அல்லது 'ஆசினி') என்பதும் ஒன்றாகும்.

 இவ்வாறாக 'ஆசனி ஊரணி' என்ற அழகான தமிழ்ப் பெயர் கிடைத்துள்ளது.