அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 1 June 2013

இஸ்ரேலில் ஃபலஸ்தீனர்கள் கூட்டாக புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு!

2013610520903734_20
டெல் அவீவ்:1948-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இஸ்ரேல் உருவாக காரணமாக இருந்த போரின் போது யூத சியோனிஸ்டுகள் கூட்டுப்படுகொலைச் செய்த ஃபலஸ்தீனர்களை கூட்டாக புதைத்த  கல்லறைகள் டெல் அவீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜாஃபா மாவட்டத்தில் ஆறு கல்லறை அறைகளில் கொல்லப்பட்ட ஃபலஸ்தீனர்களின் உடல் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை புதுப்பிப்பதற்காக சுத்தப்படுத்தும்போது மண் சரிந்தது.பின்னர் தோண்டி பரிசோதித்த போது உடல் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
போரின்போது இங்கு தான் கொல்லப்பட்ட ஃபலஸ்தீனர்கள் கூட்டாக புதைக்கப்பட்டதாக 80 வயதான மீன்பிடித் தொழிலாளியான அத்தர் ஸைனப் கூறுகிறார்.அன்று மூன்று மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்டகொல்லப்பட்டவர்களின் உடல்களை தான் கப்றுஸ்தானுக்கு(அடக்கஸ்தலம்) கொண்டுவந்ததாக அத்தர் எ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இறந்த உடல்களை கண்டுபிடித்து அடக்கம் செய்பவர்களுடன்அத்தர் ஸைனபும் உதவிக்கு சென்றிருந்தார்.இரவு, பகல் பாராமல் தாங்கள் உடல்களை அடக்கஸ்தலத்திற்கு கொண்டுவந்ததாக கூறும் அத்தர் ஸைனப், குழந்தைகளையும், முதியவர்களையும் மதச் சடங்குகள் எதுவும் நடத்தாமல் ஒரே கல்லறையில் புதைத்ததாக தெரிவிக்கிறார்.
ஃபலஸ்தீனுக்கு சொந்தமான நகரம்தான் ஜாஃபா.இஸ்ரேல் ராணுவமும், ஆயுதம் ஏந்திய யூதர்களும் ஒருங்கிணைந்து இங்கு வெறியாட்டம் நடத்தினர்.1950-ஆம் ஆண்டு இப்பகுதி டெல் அவீவுடன் அநீதமாக இணைக்கப்பட்டது.பின்னர் டெல் அவீவ் ஜாஃபா என அழைக்கப்பட்டது.1948-ஆம் ஆண்டு நடந்த போரில் 7,60,000 ஃபலஸ்தீன் மக்களை இஸ்ரேல் ராணுவம் விரட்டியடித்தது.

thoothuonline thanks

No comments:

Post a Comment